புள்ளிவிபரங்கள், கருத்துக்கணிப்புகள் என்பவைசார்ந்தும் ஊடகவியலாள்ர்கள் விமர்சனத்தன்மையுடன் இருப்பது சிறந்ததாகும். சில நிறுவனங்கள் தயாரித்த தகவல்தரும் கையேடுகள்கூட சிலவேளைகளில் மிகைப்படுத்திய அல்லது தவறான தகவல்களைக் கொண்டிருக்கலாம். சிலவேளைகளில் பொய்யான தகவல்கள்கூட மாற்றம்செய்யப்பட்டு இவ்வகைக் கையேடுகளில் எழுதப்பட்டிருக்கலாம்.
சிலவேளைகளில் முட்டாள்தனமான சில செய்திமூலங்களும் சில நம்பகத்தன்மையற்ற தகவல்களை ஊடகநிறுவனங்களிற்குத் தரலாம். அனேகமாக அநாமதேயத் தொலைபேசிகள்மூலம் இவ்வகைச் செய்திகளை அவர்கள் வழங்கலாம். இதுபற்றிய கவனம் ஒரு ஊடகவியலாளரிற்கு அவசியம்.
மொத்ததில் செய்திமூலஙகள்சார்ந்து ஒரு ஊடகவியலாளர் கவனமாக இருக்கவேண்டியது முக்கியமாக கீழ்வரும் மூன்றுவகையிலாகும்:
செய்திமூலத்துடனான உடகவியலாளரின் தொழில்சார் உறவு.
செய்திமுலமாயுள்ள நபர்பற்றிய விமர்சனத்தன்மை .
செய்தியினைத் தரும் ஆவணங்கள்பற்றிய விமர்சனப்பார்வை.