செய்திமூலங்களாகத் தொழிற்படக்கூடிய நபர்களுடன் பரஸ்பர உறவு இருந்தாலும் ஊடகவியல் நியமங்களிற்குமாறாகத் தொழிற்படமுடியாது என்பதை அவர்களிற்கு உணர்த்துவதும் ஊடகவியலாளர் ஒருவரின் கடமையாகும். சொந்தநலன்கள் இல்லாத செய்திமூலங்களைக் காண்பது அரிது, அதனால் சொந்தநலன் இல்லாத மூலங்களைத் தேடுவதில் நேரத்தையும் சக்தியையும் விரயம் செய்யாதீர்கள். ஆனால் பல்வேறு நபர்கள்-மூலங்கள்-சொல்லும் தகவல்களை எவ்வாறு சரிபார்த்துக்கொள்வதென்பதை அறிந்திருங்கள்.
ஒரு செய்திமூலத்தினைத் தெரிவுசெய்யும்போது கவனத்தில்கொள்ளவேண்டிய கேள்விகள்:
ஒருவர் ஏன் இதனைச் சொல்கிறார்? (இது உண்மையா?)
இதன்மூலம் ஒரு செய்திமூலம் என்ன இலாபத்தை அடைகிறார் அல்லது இழக்கிறார்? (இது உண்மையா?)
ஒருவர் தான் சொல்லும்விடயத்தினைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறாரா?
ஒரு விடயத்தை நேரில்பார்த்த நபரானவர், வேறொருவர் சொல்வதைக் கேட்டவரைவிடச் சிறந்த செய்திமூலமாயிருக்கலாம்.
ஒரு தகவலைச் சொல்லும் நபருடன் ஊடகவியலாளராகிய உங்களுக்கு நெருங்கிய உறவு உண்டா?
-இந்த விடயத்தைப் பற்றிக் கதைப்பதற்கு அவரிற்கு தகமையுண்டா?
-அந்த நபர் சார்ந்து ஊடகவியலாளராகிய உங்களுக்கு விருப்பு வெறுப்புகள் ஏதும் உண்டா?
எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்குப் பிடித்ததைகூறும் செய்திமூலங்களுடன் மிக அவதானமாயிருங்கள்.
ஒருவருடன் நட்பாயிருப்பதும் செய்திமூலமாக உள்ள ஒருவருடன் தொடர்ந்த உறவைபேணுவதும் ஒன்றிற்கொன்று ஒத்துப்போகாத விடயங்கள் என்பதையும் கவனத்தில் கொள்க. அதாவது தொழில்சார்ரீதியாக உறவைப் பேணுவதும் நட்பாயிருப்பதும் வேறு வேறு விடயங்கள் என்பதை விழங்கிக்கொள்க.