Posted in

செய்திமூல விமர்சனம்-Source critique

செய்திமூலங்களை விமர்சனத்தன்மையுடன் அணுகுதல்

சமூகத்தில் இடம்பெறும் விடயங்களிற்கு ஆதாரமாக அல்லது மூலங்களாக உள்ளவர்களுடன் விமர்சனத்தன்மையுடன்கூடிய உறவை நாம் வைத்துக்கொள்ளவேண்டும். ஊடகவியலாளர்களின் கவனத்திற்கு எவரும் ஒரு விடயத்தினை கொண்டுவருகிறார்களென்றால் அவர்கள் அவ்விடயத்தை வெளிக்கொணர்வதன்மூலம் எதனையோ அடையமுனைகிறார்கள் என்பதை நாம் விழங்கிக்கொள்ளவேண்டும்.

ஊடகவியலாளர்களாகிய நாம் எம்மைச்சுற்றி நடக்கும் உண்மைச் சம்பவங்களை வெளிக்கொணரவேண்டும். எமது தொழிற்பாடானது தகவல்களைப் பெறுவதன்மூலம் வெளிஉலகத்திற்கு எதோ ஒன்றை சொல்வதாகும். இதனை நாம் அனேகமாக செய்திமூலங்களை வைத்தே செய்கிறோம். ஆனால் செய்திமூலங்கள் எதனைச் சொன்னாலும், ஒரு செய்தியை வெளியில் நாம் கொண்டுவரும்வேளை அச்செய்தியில் உள்ள உண்மைத்தன்மைக்கு நாமே பாத்திரவாளிகள். ஓரு ஊடகவியலாளராக அச் செய்திக்குப் பொறுப்புக்கூறவேண்டிய பாத்திரம் எம்முடையதே. எனவே மூலங்கள் சொல்லும் தகவலை விமர்சனத் தன்மையுடன் பார்க்கவேண்டியது ஒரு ஊடகவியலாளரின் மிக மிக முக்கியமான தொழிற்பாடாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *