ஓரு நேர்காணலிற்கான முற்கூட்டிய ஒப்புதல்கள்
ஒரு நேர்காணலிற்கு முன்னதாக குறிப்பிட்ட விடயங்கள் சார்ந்து நேர்காணல் செய்யப்படுபவருடன் சில ஒப்புதல்களைச்செய்யவேண்டியிருக்கும். உதாரணமாக சில விடயதானங்கள் சார்ந்து ஒருவர் தனது கருத்துக்களை கூறமுடியாதிருக்குமென்பார் அல்லது தனது தனிப்பட்ட வாழ்க்கைபற்றிய கெள்விகளிற்கு பதில் வழங்கமாட்டேன் என்பார். சிலர் குறிப்பிட இடங்களிலேயே செவ்வியினை வழங்குவேன் என்றுகூட அடம்பிடிப்பார்கள். இப்படியான ஒப்ப்புதல்களை ஏற்றுக்கொள்ளலாமா இல்லையா என்பதை நேர்காணல் ஆரம்பிக்கமுன்னர் ஆராய்ந்து ஒரு முடிவினை எட்டவேண்டும். அதன்பின்னர் செய்யப்படும் நேர்காணலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்புதலினை நிச்சயம் கடைப்பிடிக்கவேண்டும்.