Posted in

நேர்காணல் நுட்பங்கள்

ஒருவரை நேர்காணல் செய்வது ஒரு இலகுவான காரியம்போல் எம்மில் சிலரிற்குத் தோன்றினாலும், ஒரு நேர்காணலை கச்சிதமாகச் செய்வதற்கு அதன் நுட்பஙளை நாம் அறிந்திருப்பது அவசியமாகும். சுருக்கமாகச்சொல்லப்போனால், ஒரு நேர்காணல் நிலைமையில் கேள்வி கேட்பவர் ஒருவரும் பதில்சொல்பவர் ஒருவரும் இருப்பர். இந்த நிலமையில் பதில் சொல்பவரே முக்கியநபராகும், ஆனால் சிலவேளைகளில் கேள்விகளைக் கேட்கும் ஊடகவியலாளர் அதனை மறந்துவிடுவதும் உண்டு. இதனை இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால் கேள்விகேட்கின்ற ஒரு சில ஊடகவியலாளர்கள், முக்கியமாக காணொளி ஊடகங்களிலும் கேட்டல் ஊடகங்களிலும் தமது கேள்விகளின் மூலம் பார்வையாளர்களையும் கேட்போரிற்கும் தமது மேதாவித்தனத்தைக் காட்டி நிகழ்ச்சி பார்ப்போரை ஈர்க்கவேண்டுமென்ற நோகத்தை மட்டுமா கொண்டுள்ளனர் என எண்ணத் தோன்றுவதுண்டு.

அப்படியானால் ஒரு நல்ல நேர்காணலை எப்படிச் செய்யலாம்?

  • தெளிவானதொரு விடயம்.
  • அந்த விடயத்தைப் பற்றிய அறிவு
  • சரியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட கேள்விகள்.
  • குறிப்பிட்ட நேர்காணலிற்கு முன்னதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள்.
  • சரியான தயார்படுத்தல்.

தொடர்ந்து உரிய பகுதியைச் சொடுக்கி இதன் விளக்கத்தைப் பெறவும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *