காணொளி விபரணங்களைத் தயாரிப்பவர்களிற்கு ஒரு வழிகாட்டி
கதைசொல்லலே ஒரு தரமான விபரணத்திற்கான அடிப்படை. வெவ்வேறு முறைகளில் கதைசொல்லும் உத்தியை விழங்கிக்கொள்வதுடன், அது உங்கள் விபரணக்காணொளியின் கட்டமைப்பிலும் உணர்விலும் எவ்வகைப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் காணொளி விபரணங்களை மேம்படுத்தக்கூடிய நுட்பங்களைப் பார்ப்போம்.
நீங்கள் தெரிவுசெய்கின்ற கதைசொல்லும் முறையே உங்கள் விபரணத்தின் முதுகெலும்பாகும். ஒரு குறிப்பிட்ட கதைசொல்லும் முறையா அல்லது பல கதைசொல்லும் முறைகளின் கூட்டா உங்கள் தெரிவு என்பது ஒரு முக்கியமான முடிவாகும். காரணம் இம் முடிவானது ஏனைய விடயங்களில் தாக்கத்தினைச் செலுத்தும், உதாரணமாக நீங்கள் செவ்விகளை மேற்கொள்ளப் போகின்றீர்களா அல்லது குரல்வளி விளக்கங்களை வழங்கவுள்ளீர்களா, எப்படி ஒளிப்பதிவினைச் செய்யப்போகிறீர்கள், எவ்வாறு எடிற் செய்யப்போகின்றீர்கள் என்பதுபோன்ற தெரிவுகளிற்கு இந்த முடிவு முக்கியமானதாகும். உங்கள் விபரணத்தின் முக்கிய ஆன்மா அல்லது உணர்வு எப்படி வெளிப்படவுள்ளது என்பதுவும் இந்த முடிவுடன் தொடர்புபட்டதாகும்.
நான்கு விதமான முக்கிய விபரணப் பாணிகள்
விபரணங்களை பலமாதிரி வகைப்படுத்தலாம். நன்கு அறியப்பட்ட சினிமா விமர்சகரும் ஆவணப்பட ஆய்வாளருமாக Bill Nichols அவைகளை வகைப்படுத்துவதில் பாவனையில் உள்ள வகைகளில் முக்கியமான நான்கு வகைகள் இவையாகும்.
- செவ்விவழி அமைகின்ற விபரணம்
எடுக்கப்பட்ட விடயத்தில் முக்கிய நபர் அல்லது நபர்களாகக் காணப்படுபவர்களுடனான செவ்வியை அடிப்படையாக்க் கொண்டு தயாரிக்கப்படும் விபரணங்கள் இவை. வழக்கமாக இவ்வகை விபரணங்கள் ஒரு விடயத்தை அல்லது ஒரு நிகழ்வினை ஆழமாக அறியக்கூடியதாகத் தயாரிக்கப்படும்.
இதில் உள்ள சாதக நிலைமைகள்:
- பாத்திரத்தினுடைய அச்சொட்டான சிந்தனைகளையும் எண்ணங்களையும் செவ்வி மூலம் கொண்டுவரலாம்.
- உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய பாத்திரமாயின் செவ்வி மூலம் அவர்களின் உணர்வுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரலாம்.
பாதக நிலைமை:
- கதைசொல்லல் எப்படிப் போகும் என்பதை நாம் தீர்மானிக்கமுடியாது, காரணம் பாத்திரத்தின் பதிலே அதனைத் தீர்மானிக்கும்.
- ஒரேவகையான பதில்களும் உணர்வுகளை வெளிப்படுத்தாத பதில்களும் விபரணத்தினை சலிப்புத்தருவதாக மாற்றிவிடக் கூடும். என்வேதான் செவ்விகாணஉள்ளவர்களை கவனமாகத் தெரிவுசெய்யுங்கள்.
- நிகழ்ச்சிநடத்துனர் வழிநடத்துகின்ற விபரணம்
இவ்வகை விபரணங்களில் ஒரு நிகழ்ச்சிநடத்துனரே இடையிடைதோன்றி கதையினை நகர்துவார். செவ்விகளையும் அவரே மேற்கொள்ளுவார், அத்துடன் சிலவேளைகளில் குரல்வளிவிளக்கத்தையும் அவரே தருவார். எந்தவிதக் கதைகளையும் இம்முறை மூலம் சொல்லலாம். இது வரலாற்றில் நடந்த விடயங்களாக இருக்கலாம் அல்லது ஒரு பயணக்கதையாகவும் இருக்கலாம்.
இதில் உள்ள சாதக நிலைமைகள்: ஒரு விடயதானத்தில் கூர்மையான கவனம் கொள்ளத்தக்கவகையில் விபரணத்தை இதனால் உருவாக்கமுடியும். ஒரு பெரும் கதையொன்றில் குறிப்பான விடயத்தைக் குறித்து நிகழ்ச்சிநடத்துனரானவர் பார்வையாளர்களை வழிநடத்தி கவனம்கொள்ளவைக்கலாம்.
பாதகநிலைமை:
நிகழ்ச்சிநடத்துனரானவர் சிலவேளைகளில் குறிப்பிட்ட கதையிலிருந்து விலகிச்செல்லலாம். சிலசமயங்களில் ஒரு தரமான நிகழ்ச்சி நடத்துனரைப் இப்பணிக்கு அமர்த்துவது செலவுகூடியதாகவும் இருக்கலாம்.
- அவதானிப்பு விபரணம்
இந்த விபரணமுறையில் நடக்கின்ற சம்பவங்களை அப்படியே அச்சொட்டாகக் கமெராவிற்குள் அடக்குவர். ஒரு விபரணத் தயாரிப்பாளர் அந்த இடத்தில் இருப்பதைப் பார்வையாளர்கள் உணரமாட்டார்கள். சம்பவங்களை அது நடக்கும்போக்கிலே கமராவிற்குள் அடக்குவர் «சுவரில் இருக்கின்ற ஒரு இலையான்போல» நடக்கின்ற சம்பவங்களை அவதானித்து அதனைத் தனது கருவிக்குள் அடக்குவார் ஒளிப்பதிவாளர். இந்த விபரண முறையில் குரல்வளிவிளக்கங்கள் இருக்காது, செவ்விகள் இருக்காது. கமெராவானது பாத்திரத்தினைத் தொடர, பார்வையாளர்கள் தமது பார்வையில் விடயங்களை விளங்கிக்கொள்ள இங்கே சந்தர்ப்பம் கிடைக்கிறது.
சாதகநிலைமை:
பார்வையாளர்கள் தமது இடத்திலிருந்து ஒரு புறநிலைப் பார்வைமூலம் காணொளியினைப் பார்த்து தமது சொந்த முடிவுகளை எட்ட இந்த விபரணமுறை இடமளிக்கிறது.
பாதகநிலைமை
இந்தமுறையில், காணொளிவிபரணத்திற்கு கட்டாய தேவையான சம்பவங்களை கமெராவிற்குள் அடக்குவதற்கு சிலவேளை பல மாதங்கள் அல்ல சிலவேளைகளில் வருடங்கள்கூடக் காத்திருக்கவேண்டி வரலாம்.
- கதைசொல்லி ஒருவர் வழிநடத்தும் விபரணம்
ஒரு விபரணத்திற்கு அவசியமான மேலதிகத் தகவல்கள், விளக்கங்கள் என்பவற்றை ஒரு கதைசொல்லி காணொளியிற்கு இடையே தனது குரல்வளிவிளக்கங்கள் மூலம் செருகி இவ்வகை விபரணத்தினைத் தயாரிப்பார். ஒரு கண்காணிப்பு- அல்லது செவ்விவளி தயாரிக்கப்பட்ட விபரணத்தில் இது முடியாது.
சாதகநிலைமை:
குரல்வளி மூலம் வழங்கப்படும் விளக்கங்கள் மூலம் பார்வையாளர்களிற்குச் சொல்லப்படும் கதையின்போக்கினை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கமுடியும்.
பாதகநிலைமை:
பெருமளவிலான குரல்வளிவிளக்கங்கள் பார்வையாளர்களிற்கு தேவைக்கதிகமான தகவல்களையும் விளக்கங்களையும் வழங்கும். இதன்மூலம் விபரணத்தில் உள்ள பார்த்தல் அனுபவம் வெகுவாகக் குறைக்கப்படும்.
பலபாணிகளையும் கலந்த விபரணம்
ஒரு விபரணத்தினைத் தயாரிக்கும்போது, கவனத்தில்கொள்ளுங்கள் பல விபரணத்தயாரிப்பாளர்கள் இவற்றில் ஒன்றிற்கும் மேற்பட்ட பாணிகளைக் கலந்து கதைகளைச் சொல்லும் முறையும் வழக்கத்தில் உள்ளது. இதுபற்றி ஒரு முடிவினை எட்டமுதல், உங்கள் கதையானது எவ்வகையானது, யார் உங்கள் பிரதான பாத்திரம் என்பவற்றை மட்டுமல்ல; உங்கள் பாரவையாளர்கள் குறிப்பிட்ட விபரணம் மூலம் எவ்வகை உணர்வை உணரவேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் கருத்திலெடுங்கள்.
விபரணத் தயாரிப்பு – கதைசொல்லலில் மூன்று-செயல் அமைப்பு முறை
இப்போது நீங்கள் ஆவணப்படத் தயாரிப்பு செயல்முறையைப் பற்றி நன்கு புரிந்துகொண்டுள்ளீர்கள், உங்கள் கதையைப் பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டிய நேரம் இது. இதனைத் தொடங்குவதற்கான சிறந்த வழி மூன்று-செயல் அமைப்பைப் பயன்படுத்துவதாகும்.
மூன்று-செயல் அமைப்பு என்பது உங்கள் ஆவணப்படத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் ஒரு உன்னதமான கதை சொல்லும் மாதிரியாகும்: சட்டம் 1 (அமைப்பு), சட்டம் 2 (மேம்பாடு) மற்றும் சட்டம் 3 (உச்சநிலை மற்றும் முடிவு). ஒவ்வொரு பகுதிக்கும் அதன் சொந்த இலக்குகள் உள்ளன, அவை உங்கள் ஆவணப்படத்தின் கட்டமைப்பையும் போக்கையும் திட்டமிட உதவும்.
ஆரம்பத்தில், உங்கள் முக்கிய கதாபாத்திரங்களையும், சூழலையும் அறிமுகப்படுத்துவதும், படத்தின் மீதமுள்ள பகுதியை இயக்கும் முரணை அமைப்பதும் உங்கள் குறிக்கோளாகும். நடுவில், நீங்கள் முரணை இன்னும் ஆழமாக ஆராய்ந்து, புதிய கதாபாத்திரங்கள் மற்றும் துணைக் கதைகளை அறிமுகப்படுத்துவீர்கள். இறுதியில், நீங்கள் முரணைத் தீர்த்து, தளர்வான முனைகள் அனைத்தையும் முடிந்துவைப்பீர்கள்.