செய்தி வாசிப்பவர் வழங்கும் முன்னணிச் செய்தி விளக்கம் – Introduction.
ஒரு காணொளிச் செய்தியினை ஓடவிடுவதற்கு முன்னர் கலையகத்திலிருந்து வழங்கப்படும் முன் அறிவிப்பு இது. அந்த முன்னறிவிப்பு எவ்வகையில் இருக்க வேண்டும்?
- செய்தியினை சுருக்கமாகச் சொல்லவேண்டும்.
- பார்ப்போரையும் கேட்போரையும் கவனம்கொள்ளவைக்கவேண்டும்.
- அதனை வழங்கும் கலையக அறிவிப்பாளர் ஒரு தேர்ந்தவராக இருக்கவேண்டும்.
செய்தி என்ன என்பதை முழுமையாக அறிவிக்காமல் சரியானதொரு அறிமுகத்தை ஒரிரண்டு வசனத்தில்சொல்வது உகந்தது. காணொளியானது விபரமாக அதனைச்சொல்லும் என்பதை விளங்கிக்கொள்க. அப்படியானால் இந்த முன் அறிவிப்பானது ஆர்வத்தினை தூண்டும் வகையில் சுருக்கமாக எழுதப்பட்டிருக்கவேண்டும். ஒரு காணொளியின் ஆரம்பவசனத்தினையே கலையகத்தில் உள்ள செய்தியாளரும் பாவிக்கக் கூடாது.