ஒரு செய்தியைச் சொல்வதற்கு வெளிக்களத்திற்குச்செல்வது முக்கியமானதாகும். ஆனால் தூரம், பொருளாதாரம், நேரமின்மை என்பன இதனைக் கடினமானதாக்கலாம். இருந்தபோதும் உள்ளதற்குள் சிறப்பான தெரிவுகளை நாம் மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஒரு செய்தியினைச் சொல்வதற்கு அதுபற்றிய சூழ்நிலைமைகளிற்கு(situations) நாம் செல்லவேண்டும். நடக்கும் ஒருசம்பவத்தினை அல்லது நடந்துமுடிந்த சம்பவத்தினை நாம் கமெராவிற்குள் அடக்கவேண்டும். அதாவது அசையும்படங்கள் கொண்ட நிலமை காணொளியில் வேண்டுமென்றால், அது எதுவென நாம் தேடவேண்டும். ஒரு பார்த்தல் அனுபவத்தினை பார்வையாளர்களிற்குக் கொடுக்கவேண்டுமென்றால் தானாகவே நடக்கும் ஒருசம்பவத்தினை நாம் தேடிப்போகவேண்டும். அதுகாணொளிக்கு ஒரு உயிர்ப்பினைக் கொடுக்கும். இந்தச்சம்பவங்கள் காணொளியினை தொகுக்கும்போது (எடிற்செய்யும்போது) அதற்குரிய சம்பவக்கோர்வைகளைக்(sequences) கொடுக்கும். பொதுவிலே ஒரு காணொளிச் செய்தியினைச்சொல்வதற்கு 2-3 சூழ்நிலைகள் தேவைபடும். இந்தச்சம்பவங்கள் தாமாகவே நடக்கவேண்டும், மாறாக எம்மால்ஒழுங்குபடுத்தப்பட்டதாக அவை இருக்கமுடியாது. அத்துடன்நாங்கள் ஏற்கனவே எழுதிய கவனம்கொள்ளும் வசனத்திற்குஅமைவாக அந்தச் சம்பவங்கள்/ சூழ்நிலை இருக்கவேண்டும். இவ்வகைச் சூழ்நிலையில்வருகின்ற மாந்தர்களை நாம் செவ்விகாணக்கூடியதாக இருக்கவேண்டும். இந்த செவ்விகள் குறிப்பிட்டமாந்தர்களின் கருத்துகள், உணர்வுகள், கதைகள், ஒருசம்பவம் பற்றிய விளக்கங்கள் என்று ஒரு காணொளிக்குப் பங்களிப்பைச் செய்யவேண்டும்.