Posted in

குரல்வளி விளக்கங்கள் – Voice overs

காணொளியில் தரப்படும் குரல்வளி விளக்கங்கள் அதனைத் துல்லியமாக்கவும் விளக்கம் கொடுக்கவும் உதவும். குரல்வளிவிளக்கங்களும்(voice overs) சூழ்நிலைகளும்(situations) பின்வருமாறு ஒழுங்குபடுத்தப்படலாம்.

  • செய்திக் களத்தில் பதிந்து எடுக்கப்ப்ட்டகாணொளியானது ஒரு சம்பவக்கோர்வையாக எடிற்செய்யப்படவேண்டும். சம்பவக்கோர்வை எனும்போது அது அடிப்படையான பிரதான செய்திக்காணொளியில் சிறு அசையும் படங்களாலான ஒரு கதையாகும். இவ்வாறான சம்பவக்கோர்வைகள் மாறும்விடயங்களை, விபரங்களை குரல்வளிவிளக்கமானது (Voice over) தெரிவிக்கஉதவும். இதற்கான விளக்கத்தினை இந்தக்காணொளியில் பாருங்கள்.
  • காணொளியில்வரும் ஒரு சம்பவத்துடன் பிறிதொருசம்பவத்துடன் இணைப்பதற்கும் குரல்வளி விளக்கம்(Voice over) உதவும். இதன் மூலம் எந்தக் காலத்தில் எந்த இடத்தில்சம்பவம் நடைபெறுகிறது என விளக்கலாம்.
  • சூழ்நிலைகளிற்கு இடையிலான இடைவெளிகள். ஒருசம்பவத்திலிருந்து இன்னொரு சம்பவத்திற்குக்காட்சிமாற்றம் நடைபெறும்போது கூடியளவு இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதாவது எல்லா இடத்திலும் குரல்வளி விளக்கங்கள்தேவையற்றது என்பதை உணர்க. ஒரு சூழ்நிலையில்இயல்பான ஒலியுடன் அசையும்படங்கள் இருப்பதைஅனுமதியுங்கள். சிலவேளைகளில்காட்சிமாற்றத்திற்கும் இது உதவலாம்.
  • மொழிப்பிரயோகம். சரியான மொழிப்பிரயோகத்தைக் கடைபிடியுங்கள். காணொளியில் தெரிவதை குரல்வளிவிளக்கத்திலும் சொல்லவேண்டியதில்லை. மற்றையது ஒரு இயல்பான எளிய மொழியைப் பயன்படுத்துங்கள்.
  • குரல்வளிவிளக்கத்தினை வழங்கும் முறை. எடுக்கப்பட்டகாணொளிச் செய்திக்குரியவகையில் குரல்வளிவிளக்கத்தினை வழங்குங்கள். தெளிவான, அதெவேளை உரியவேகத்தில் வாசியுங்கள். குறிப்பிட்ட காணொளியில் எடுக்கப்பட்ட கதைசொல்லும் முறைக்கு ஏற்றவகையில் வழங்கலைச் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *