காணொளி ஊடகத்தின் மூலம் பலமுறைகளில் கதைசொல்லலாம். கதைநடக்கும் ஒழுங்கில் அல்லது ஒருஆர்வத்தைத் தூண்டும்வகையில் கதையினைச் சொல்வது உள்ளவற்றில் இரண்டு முறைகளாகும். ஒரு கதைசொல்லும் எளியமுறையாக கீழ்வரும் முறையினைக் கொள்ளலாம்.
- ஓரு ஆரம்பம். இது பார்வையாளர்களின் கவனத்தினைத்தூண்டவல்ல, ஆனால் அதேவேளை செய்தி முழுவதையும் சொல்லாத ஒலியுடன்கூடிய ஒருசிறு அசையும் படம். இதனை உதாரணத்துடன்விளக்கும் காணொளியினை இங்கே சொடுக்கிப்பார்க்கவும்:
- அறிமுகம். முரண் இங்கே சொல்லப்படும், செய்தி எதைப்பற்றியதென இங்கே விளம்பப்படும்.
- விளக்கம். கவனம்பெறும்வசனத்திலிருந்துஉருவாக்கப்பட்ட வினாக்களிற்கு இங்கே விளக்கம்கிடைக்கும்.
- ஒரு முடிவு. செய்தியானது இங்கே ஒரு முடிவைத் தரும்அல்லது எதிர்காலத்தில் நடக்கவுள்ள நிலைமையினைச் சொல்லும் அல்லது ஆரம்பத்தில் எடுக்க்ப்பட்ட சம்பவத்திற்கு விளக்கத்தினைத் தரும்.
ஒரு காணொளிக்கான கட்டமைப்பைத் தீர்மானிக்கும்போதுஅந்தக் கட்டமைப்பானது பார்வையாளரிற்கு எவ்வகையில் பொருந்துகிறது என்பதைக்கருத்திற்கொள்ளவேண்டும். காணொளியின் நோக்கமானதுபார்வையாளரின் கவனத்தைத் தொடர்ந்து வைத்திருப்பதிலிருக்கவேண்டும். எனவேதான் எந்தக்கட்டமைப்பைத் தெரிவுசெய்தாலும் முன்நோக்கிய நகர்வு (progress) கட்டமைப்பில் ஒரு முக்கிய அம்சமாகும். பார்வையாள்ர்களின் ஆர்வத்தினைத் தூண்டி அதனைத்தக்கவைப்பது ஒரு காணொளியின் முக்கிய தரஅளவுகோலாகும். அத்துடன் இயல்பாகவே பார்வையாளர்களிற்கு ஏற்படும் ஆர்வத்திற்குரிய பதிலளிப்பது காணொளியின் முக்கிய தொழிற்பாடாகும். இறுதியில் ஓரு செய்திக்காணொளியானது எவ்வகையில் முடிவுறுகிறது என்கின்ற பார்வையாளர்களின் ஆர்வத்திற்குக் காணொளியானது பதிலினை வழங்கவேண்டும்.