ஒரு செய்தியைக் காணொளி ஊடகத்திற்குத் தயாரிப்பது எவ்வாறு? காணொளியினையும் ஒலிவடிவங்களையும் எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதனை ஒரு காணொளி ஊடகவியலாளர் அறிந்திருப்பது அவசியம்.
முதலாவதாக ஒரு பொறுப்பான ஊடகத்தின் செய்திக்காணொளியானது முக்கியத்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும், நம்பிக்கைக்கு உரியதாக இருக்கவேண்டும், இலகுவிற்புரியக் கூடியதாக இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல அந்தத் தயாரிப்பு பார்வையாளர்களைக் கவர்ந்து அந்தச் செய்திசார்ந்து அவர்களை ஈடுபடவைக்கவேண்டும். ஒரு காணொளித்தயாரிப்பாளர் ஒருநல்ல கதைசொல்லியாக இருப்பதும் மிக அவசியம். சிறியதும்பெரியதுமான சில தெரிவுகளைச் செய்வது ஒரு நல்லகாணொளிச் செய்தியினைத் தயாரிக்க உதவும். ஒருஊடகவியலாளராக இதன்மூலம் உங்கள் தொழிலும் சுவாரசியம்மிக்கதாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
ஒரு காணொளித் தயாரிப்பில் முக்கியமாக அதில்வருகின்ற உள்ளடக்கமே அதனைச் முக்கியமானதாகவும் சுவாரசியம்மிக்கதாக உருவாக்குகிறது. ஒரு காணொளியின்கட்டமைப்பு, கமெராவினை இயக்கும்போது நீங்கள் எவ வகை அசையும் படங்களை அடக்குகிறீர்கள் என நீங்கள் செய்யும் தெரிவுகள், குரல்வளி நீங்கள் கொடுக்கும் விளக்கம் (voiceover) ஆகியன ஒரு காணொளித் தயாரிப்பினைச் சிறப்பானதாக ஆக்குகின்றது.
ஒரு காணொளிக் கதையானது இலகுவில் விளங்கக்கூடியதாகவும், ஒருவரை ஈடுபடவைக்கவல்லதாகவும் இருக்கவேண்டும். அதற்கு அந்தக்காணொளிக் கதையானது தெளிவான கவனம்கொள்ளவைக்கும் வசனத்தின் (focus sentence) மீது கட்டப்பட்டதாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் குறிப்பிட்ட காணொளிக் கதையில் தெளிவான, துல்லியமான செய்தி இருக்காது.