கவனம்பெறும் வசனம் (focus sentence) என்றால் என்ன?
ஒரு செய்தியுடன் சம்பந்தமாகப் பல விடயங்கள் கவனம்பெறும். அதில் எதனைப்பற்றி நாங்கள் செய்தி தயாரிக்கப்போகின்றோமென்பது முக்கியமானது, இல்லாவிட்டால் இதுபற்றிய தெளிவில்லாமல் நாம் செய்திதயாரிக்கப் புறப்படுவோம். இதன் காரணமாக செய்திதரும் மூலங்களிடம் எண்ணுக்கணக்கில்லாமல் பலவிதமானகேள்விகளைக் கேட்கநேரும். இதனால் எதனைச் செய்தியாக்கப் போகின்றொமென அறியாமல் நாம் தடுமாறநேரிடும். கவனம் பெறவேண்டிய ஒரு வசனத்தினை(focussentence) செய்திசார்ந்து எழுதிவிட்டோமென்றால் அந்தச்செய்தியினை நேர்த்தியாக எம்மால் தயரிக்கமுடியும். ஒருகவனம்பெறும் வசனமானது எழுவாயையும் வினைச்சொல்லையும் கொண்டிருக்கும். கூடியவரை இந்தகவனம்பெறும் வசனமானது(focus sentence) ஒரு முரணைக்கொண்டிருக்கவேண்டியதையும் நாம் கவனிக்கவேண்டும். இது எதிரெதிர் நிலைப்பாடுகளை அல்லது ஒத்துபோகாமையை மட்டும் கொண்டிருத்தல் போதுமானதல்ல. இந்தக் கவனம்கொள்ளும் வசனமானது ஒருவருக்கு உள்ளெயுள்ள உள்ளக முரணாகவும் இருக்கலாம். அதாவது தடுமாற்றம்(dilemma) அல்லது ஒருவர் எதிர்நோக்கும் பிரச்சனையாகவும் இருக்கலாம். ஒரு முரண் இல்லாமல் ஒரு விடயத்தில் முன்னகர்த்தல் இருக்காது என்பதை விழங்கிக்கொள்க. இந்தக் கவனம்பெறும் வசனமானது(focus sentence) ஒரு கேள்வியாகஇருக்கமுடியாது. ஆனால் கவனம்பெறும் வசனம் பலகேள்விகளைத் தோற்றுவிக்க்கூடியது. செவ்வி காணும்போது நாம் வினவும் கேள்விகள் எப்படியாக இருக்கவேண்டுமென்பதை செவ்வி காணும் நுட்பங்கள் எனும் இந்தப் பகுதியைச் சொடுக்கிப்பாருங்கள்.