ஊடகங்கள் சார்ந்து எல்லொருக்கும் ஒரு சொந்தத் தேவையிருக்கும் என்பதை மறவாதீர்கள். கவனத்தில்கொளுங்கள், பொலீஸ் மற்றும் நீதித்துறை போன்ற அதிகாரமையங்களிற்குக் கூட உடகங்கள் சார்ந்து இவ்வாறான சொந்தநலன்கள் உண்டென்பதை விழங்கிகொள்ளுங்கள்.
ஒரு நிறுவனத்தின் தகவற்பிரிவானதுகூட சிலசமயங்களில் தம்பற்றிய தகவல்களை துறைசார்நேர்த்தியுடன் தயாரித்திருப்பார்கள். அவைபற்றியும் விமர்சனக் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொளுங்கள்.
எங்களுக்கு தகவலைத் தருபவர்களிற்காக நாங்கள் தொழிற்படுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். மிகமுக்கியமாக நாங்கள் எமது ஊடகத்தின் பார்வையாளர்கள், கேட்போர் மற்றும் வாசகர்களிற்காகவே தொழிற்படுகிறோம் என்கின்ற தொழில் அறத்தை உடகவியலாளர்களாகிய நாம் மறத்தலாகாது.