Posted in

ஒரு பரந்த செய்திமூலத்தின் முக்கியம்

ஒரு பரபரப்பான, நல்ல கவனம்பெறக்கூடிய தகவலினை ஒருவர் சொல்கிறாரென வைப்போம். சிலவேளைகளில் அந்தத் தகவலை நம்பாமல்விடுவதற்குக் காரணங்களே இல்லையே எனக் கருதக்கூடிய நிலைமைகளும் எழலாம். தகவல் எதுவாயிருந்தாலும் உங்கள் கற்பனையை முடுக்கிவிடுங்கள்! இந்த தவலின் பின்னணியில் என்ன உள்ளது? இதனைத் தெரிவிப்பவரின் பின்னணி என்ன? இதனை இவர் ஏன் சொல்கிறார்? இதனைச் சொல்வதன்மூலம் ஏதும் நன்மையடைய இவர் முயற்சிக்கிறாரா? என்பன போன்ற வினாக்களை நாம் எமக்குள்ளே எழுப்பவேண்டும்.

தகவல்தரும் மூலங்களெனும்போது தமது சொந்த நலன்களை முன்னிறுத்தித் தகவல்தருவது முக்கியமாக அரசியல் சார்ந்த செய்திகளில் இருக்கலாம். அதேபோன்று குற்றவியல்சார்ந்த செய்திகளிலும் இதனைப் பரவலாகக் காணலாம். ஆதே சமயம் பல்வேறுபட்ட ஏனைய செய்திவகைகளிலும் இவ்வாறு தமது நலன்களை முன்னிறுத்தித் தகல்வழங்குவது இடம்பெறக்கூடிய நிலமையுண்டு என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும். அப்படியானால் இதனை எவ்வாறு எதிர்கொள்வதென்ற கேள்வி எழுகின்றது.

இவ்வாறு தமக்கு விரும்பிய தகவல்களைத் தந்து ஊடகங்களில் தாக்கம்செலுத்த எவரும் முயல்கின்றனரென்றால் அதற்குத் தீர்வு பரவலானதொரு எண்ணிக்கையில்கூடிய செய்திமூலங்களை நாம் கொண்டிருக்கவேண்டும். அப்படியொரு நிலமையில் நாம் பெறுகின்ற தகவல்களின் நம்பகத்தன்மையினை இலகுவில் நாம் சரிபார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *