வெளியில் இனம்காட்டமுடியாத செய்திமூலங்கள் தொழில்முறைசார்ந்து ஊடகவியலில் ஒரு பிரச்சனைக்குரிய விடயமாகும். இதன்காரணம் முக்கியமாக இனம்காட்ட்படமுடியாத ஒரு செய்திமூலம்தரும் செய்திக்கு நம்பகத்தன்மை குறைவாக இருக்கும். இதனால்தான் செய்திமூலங்கள் வெளியில் இனம்காணப்படவேண்டும் என்பது முக்கிய உடகவியல் தொழில்சார்நியமமாக உள்ளது. இருந்தபோதும் சமூகம்சார்ந்த ஒரு முக்கியமான செய்தியினை வெளிக்கொணர வேறுவழிவகைகள் இல்லாவிட்டால் இவ்வகையில் செய்திமூலங்களைப் பயன்படுத்தலாம்.
ஆனால் இந்தமுறையில் அந்தச் செய்திமூலமாகிய நபர்பற்றி மிகக்கடுமையான விமர்சனக் கண்ணோட்டத்தை ஊடகவியலாளர் கொண்டிருக்கவேண்டும். இவ்வகை செய்திமூலங்களைப் பயன்படுத்துவதால், ஒரு குறிப்பிட்ட செய்தியில் விமர்சிக்கப்படும் பிறிதொரு நபரானவர் கருத்துக்கூற மறுக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் தோன்றக்கூடும்.