Posted in

நேர்காணலில் அறிமுகம்

ஒரு செய்திபற்றிய நேர்காணல் என்றால் நேர்காணல் சுருக்கமாக இருக்கும். எனெனில் குறிப்பிட்ட விடயம்சார்ந்து ஒருவரின் கருத்தை அறிவதே செவ்வியின் நோக்கம். மாறாக இதுவே ஒரு feature interview ஆக இருந்தால் செவ்விகாணப்படுபவர் பற்றிய தகவல்களை மற்றுமல்ல குறிப்பிட்ட நபருடைய கல்வி, தொழில், விருப்பு வெறுப்புகள், அரசியல் மற்றும் சமூகப்பார்வைகள் என்பவற்றை ஆளமாக முன்கூட்டியே அறிந்திருக்கவேண்டும். சில நேர்காணல்களில் பார்த்திருப்போம் செவ்விகாண்பவர் «உங்களைப் பற்றிய அறிமுகத்துடன் தொடங்குங்கள்!» என்றவாறு செவ்வியினை ஆரம்பிப்பார்கள். இதன் அர்த்தம் குறிப்பிட்ட ஊடகவியலாளர் தனது வீட்டுவேலையினச் சரியாகச் செய்யவில்லையென்பதுதான். பார்வையாளர்களின் அல்லது கேட்போரின் நேரம் முக்கியமானது, ஒரு செவ்வியானது பயனுள்ளதாக-effective இருக்கவேண்டும். அப்படியானால் முன்கூட்டியே செவ்விகாணப்படவுள்ளவர் பற்றிய விடயங்களை விலாவாரியாக அறிந்துவிட்டு அந்த அறிமுகத்தை ஊடகவியலாளரே சுவாரசியமாகவும் சுருக்கமாகவும் செய்யவேண்டும். அதன்பின்னர் ஒழுங்கான கேள்விகள்மூலம் நெர்காணலைத் தொடரவேண்டும். இவை யாவும் ஒழுங்கான தயார்ப்படுத்தலுடன் தொடர்புபட்டவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *