ஒரு நேர்காணலின்போதான ஓழுங்கமைக்கப்பட்ட சரியான கேள்விகள் என்றால் என்ன?கவனம்பெறும் வசனம்(Focus sentence) எனப் பிறிதொருபகுதியில் பார்த்திருப்போம். ஒரு நேர்காணலொன்றைச் செய்யமுதல் குறிப்பிட்ட செய்திசார்ந்தோ அல்லது செவ்விகாணப்படவேண்டிய நபர்சார்ந்தோ இவ்வகை கவனம்வெறும் வசனத்தினை நாம் எழுதியிருபோம். கவனம்பெறும் வசனமானது ஒரு கருதுகோளாகவும் (assesment) இருக்கலாம். அவ்வகைக் கவனம்பெறும் வசனத்தில் ஒரு முரணும் இருக்குமாறு பார்த்துக்கொளவேண்டும். அவ்வகை வசனம் எவ்வாறான கேள்விகளை எழுப்புகிறது என நாம் பார்க்கவேண்டும்.
கேள்விகள் எப்போதும் திறந்த கேள்விகளாக இருக்கவேண்டும். திறந்த கேள்விகளென்றால் அவையாவன பின்வரும் சொற்களை அடக்கியிருக்கவேண்டும்: என்ன?, ஏன்?, எவ்வாறு?, யார்?, எங்கே?, எப்போது? மூடப்பட்ட கேள்விகள் என்பது ஆம், இல்லையென்ற பதில்களைத் தருகின்ற கேள்விகளாகவிருக்கும். இதன் அர்த்தம் மூடப்பட்ட கேள்விகளையே கேட்கக் கூடாதென்பதல்ல. மூடப்பட்ட கேள்விகளிற்கான பதிலைத் தொடர்ந்து மேலே கூறிய திறந்த கேள்விகளைக் கொண்டு ஒரு உரிய உரையாடலை தொடர்ந்து மேற்கொள்ளலாம். மூடப்பட்ட கேள்விகள் ஒரு பதிலை வலியுறுத்த உதவலாம், ஒரு செவ்வியினை ஒழுங்கமைத்து முடித்துக் கொள்ளவும் அது உதவலாம்.