சில வேளைகளில் ஊடகவியலாளர்கள் ஒரே தரத்தில் இரண்டு அல்ல மூன்று கேள்விகளையுமே கேட்பதை அவதானித்திருப்போம். செவ்விகாணப்படுபவர் இதனால் எதற்குப் பதில்தருவது எனத் திணறுவது நடைபெறும். ஒரு தரத்தில் ஒரு கேள்வியே என்பதனை ஒரு முக்கிய விதியாகக் கொள்ளவேண்டும்.
சமூகநியமங்களை/விழுமியங்களை ஏற்றிக் கேட்கப்படும் கேள்விகள்
சமூகத்தில் ஏற்கப்பட்ட நியமங்களை/விழுமியங்களைக் கேள்விமீது ஏற்றிக்கேட்கப்படும் கேள்விகள் தவிர்க்கப்படவேண்டும். எவ்விதமான சமூகநியமமாக இருந்தாலும் கேள்விமீது அதனை ஏற்றிக் கேள்விகளைக் கேட்பது உகந்ததல்ல. ஊடகவியலில் உரிய அணுகுமுறையாக இது இருக்கமுடியாது; ஏனெனில் ஊடகவியலாளர் செவ்விகாணப்படுபவர் இருவரிற்குமிடையில் நேர்காணல் நிலைமையில் ஒருவகை ஏற்றத்தாழ்வு இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் . உரிய உதாரணத்துடன் ஒரு காணொளியில் இதனை விளக்குகிறோம்.