ஒரு நேர்காணலை ஏன் நாங்கள் செய்கிறோம்?
ஒரு நேர்காணலின் மூலம் எதனையோ அறிய நாம் முயல்கிறோம். என்ன நடந்தது?, அது ஏன் நடந்தது?, இதன் பின்னால் யார் நிற்கிறார்கள்?, இது எதற்கு வழிவகுக்கும்?என்பவைபோன்ற கேள்விகள் முக்கியமானவை. மொத்தத்தில் சொல்லவேண்டுமாயின் ஒருவரைக் கதைசொல்லவைக்கவே நாம் செவ்விகளைச் செய்கிறோம். ஒருவரை இவ்வாறு கதைசொல்லவைப்பதாயின் ஏற்கனவே இப்பகுதியில் கூறியுள்ள தயார்ப்படுத்தல்களும் அணுகுமுறையும் அவசியமானதாகும்.
திறந்த, எளிமையான, நடுநிலைமையான கேள்விகள் மற்றும் நன்கு ஆராய்ந்து உய்த்து உணர்ந்து எடுக்கப்பட்ட தெளிவானதொரு விடயமுமே ஒரு சிறப்பான நேர்காணலிற்கு வழிவகுக்கும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இதேவேளை தயார்ப் படுத்தாத செவ்விகளையும் மேற்கொள்ளக்கூடியநிலையிலும் ஒரு ஊடகவியலாளர். இருக்கவேண்டும். அப்படியான நிலைமைகள் செய்திக் களத்தில் ஏற்படக்கூடும். சமூகவிடயங்களை அறிந்த ஓரு ஆவல்மிகுந்த ஊடகவியலாளரால் அதனையும் எதிர்கொள்ள முடியும்.