ஒரு செய்தியை எழுதும்போது அதிகபட்ச புரிதலுக்காக வசனங்களை
எவ்வாறு எழுதுவது? மொழியின் மீதான அக்கறை ஏன் முக்கியம்?
ஒரு ஊடகவியலாளராக உங்கள் முக்கிய பணி, மக்கள் தங்களைச் சுற்றி என்ன
நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதாகும்; அவர்களின் கிராமத்தில்,
அவர்களின் நாட்டில் உள்ள மொழிவழக்கை நீங்கள் கவனத்தில் கொள்வது
அவசியம். பெரும்பாலான வாசகர்கள் அல்லது கேட்பவர்களுக்கு மொழி
இலகுவாக இருந்தாலே விடயம் அவர்களைச் சென்றடையும். எனவே
நீங்கள் அவர்களுக்காக மொழியை எளிமைப்படுத்த வேண்டும்.
செய்தியாக்கத்தைச் செய்யும்போது, மிகவும் சிக்கலான பிரச்சினைகள்
மற்றும் நிகழ்வுகளை நீங்கள் முதலில்ஆராய முடியும், பின்னர் அவற்றை
உங்கள் பார்வையாளர்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில்
வழங்கவேண்டும். இதில் நீங்கள் தோல்வியடைந்தால், மக்கள் உங்கள்
செய்தித்தாளை வாங்குவதையோ அல்லது உங்கள் வானொலி அல்லது
தொலைக்காட்சி நிலையத்தை பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள். நீங்கள்
எடுத்துக்கொண்ட உங்கள் பணியில் நீங்கள் தோல்வியடைவீர்கள் என்பதை
மறவாதீர்கள்.
குறுகிய, கூர்மையான, தெளிவான வசனங்கள்
இன்று பல பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி அல்லது இணையத்தில்
தமிழ் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி
அல்லது இணையத்திற்கு எழுதினாலும், எழுதப்படும் விடயம்சார்ந்து
அதிகபட்ச புரிதலை வழங்கும் சொற்களைப் பயன்படுத்தவேண்டும்,
அத்துடன் வசனங்களை எப்போதும் இலகுபடுத்தி வழங்கவேண்டும்.
இதன் அர்த்தம், பொதுவாக வார்த்தைகளையும் வாக்கியங்களையும்
சுருக்கமாகவும் எளிமையாகவும் வைத்திருக்கவேண்டுமென்பதாகும். நீங்கள்
நீண்ட சொற்களைப் பயன்படுத்தினால் அவை தங்கள் வேலையைச்
சரியாகச் செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உங்கள் வாக்கியங்களில் தேவையற்ற வார்த்தைகளுக்கு இடமில்லை.
வார்த்தைகள் புரிதலை அதிகரிக்கவில்லை என்றால், அவற்றை அகற்றத்
தயங்கக்கூடாது
வசனத்தின் நீளம்
செய்தி எழுதுவதில் வசனத்தின் நீளம் குறித்து எந்த ஒரு விதியும்
இல்லை, ஆனால் நீங்கள் பயன்படுத்தும் அதிகபட்ச சொற்களின்
எண்ணிக்கைக்கு நீங்களே ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.
சிறப்பு சூழ்நிலைகளைத் தவிர, எந்தவொரு வசனத்திலும் 20 சொற்களுக்கு
மேல் பயன்படுத்த வேண்டாம். இந்த விதியைப் பின்பற்றினால், உங்கள்
வசனங்கள் எளிமையாக இருக்கும், பிழைகளும் குறைவாக இருக்கும்,
மேலும் நீங்கள் சொற்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவீர்கள்.
உங்கள் வாக்கியங்களுக்கான சரியான நீளத்தை தீர்மானிப்பதற்கான மாற்று
வழி, உங்கள் வாசகர் அல்லது கேட்பவர் புரிந்துகொள்ளும் எண்ணங்கள்
அல்லது கருத்துகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதாகும். ஒரே
கதையின் இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளையும் ஒப்பிடுக. பதிப்பு A
அனைத்து யோசனைகளையும் ஒரு வாக்கியத்தில் எவ்வாறு இணைக்க
முயற்சிக்கிறது என்பதைக் கவனியுங்கள், அதே நேரத்தில் பதிப்பு B
அவற்றை மூன்று தனித்தனி வாக்கியங்களாகப் பிரிக்கிறது.
சுருங்கச்சொன்னால்:
- உங்கள் வாசகர்கள் அல்லது கேட்போர்கள் செய்திகளைப் புரிந்துகொள்ள
ஏதுவாக உங்கள் மொழியை தெளிவாகவும் எளிமையானதாகவும் நீங்கள்
வைத்திருக்க வேண்டும். - வாக்கியங்கள் சுருக்கமானதாக இருக்க வேண்டும். 20 வார்த்தைகளுக்கு
அல்லது மூன்று விடயதானங்களிற்கு மேலாதனதாக அவை
இருக்கக்கூடாது. - வாக்கிய அமைப்பு எளிமையானதாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல,
புதிய வார்த்தைகள் பயன்படுத்தும் போது அவற்றை விளக்கத்
தவறாதீர்கள்.