Posted in

செய்திகளிற்கான அளவுகோள்

செய்திகள் மதிப்பிடப்படும் அளவுகோல்களை பின்வருமாறு நிரற்படுத்தலாம்:

1. இந்தச் செய்தி புதியதா?
2. இது அசாதாரணமானதா?
3. இது சுவாரஸ்யமானதா?
4. இது குறிப்பிடத்தக்கதா?
5. இது மக்களைப் பற்றியதா?

இந்த அளவுகோல்களின் கூறுகள் நாம் வெளியில் வழங்கும் தகவலின் "செய்தி
மதிப்புத் தரத்தை" (news value) உருவாக்குகின்றன. இந்தக் கூறுகள்
வலிமையானவையாக இருந்தால் செய்தி மதிப்பும் அதிகமாகும்.

1. இந்தச் செய்தி புதியதா?

இது புதியதல்லாத செய்தி என்றால், அது செய்தியாக இருக்க முடியாது.
உதாரணமாக நன்கு அறியப்பட்ட ஒரு அரசியல்வாதியின் படுகொலை
அசாதாரணமானது, கவனத்தை ஈர்க்கும் தனமையுடையது, முக்கியத்துவம்
வாய்ந்தது மற்றும் மக்களைப் பற்றியது, ஆனால் நாளைய செய்தித்தாள்களில்
அதைப் பற்றி செய்தி வெளியிட முடியாது, ஏனென்றால் அது புதிய
செய்தியல்ல.

இருப்பினும், அந்தப் படுகொலை பற்றிய சில உண்மைகள் சிலநாட்கள் கழித்து
முதல் முறையாகத் தெரியவந்தால், அது செய்தியாக இருக்கும். படுகொலை
புதியதாக இருக்காது, ஆனால் தகவல் அப்படியே இருக்கும்.

அதேவேளை நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள், அவை
முன்னர் தெரிவிக்கப்படாதிருந்தால், இன்னும் செய்தியாக இருக்கலாம். நீங்கள்
முதல் முறையாக ஒரு செய்திக் கதையைச் சொல்கிறீர்கள் என்றால், அது

உங்கள் வாசகர்களுக்கோ அல்லது கேட்பவர்களுக்கோ புதியதாக இருக்கும்,
எனவே அது செய்தியாக இருக்கலாம்.

1. இது அசாதாரணமான செய்தியா?

எல்லா நேரங்களிலும் விடயங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன, ஆனால்
அவை அனைத்தும் புதியதாக இருந்தாலும் கூட, செய்திகளாக இருப்பதில்லை.
ஒரு மனிதன் எழுந்து, காலை உணவை சாப்பிட்டுவிட்டு, பேருந்தில்
வேலைக்குச் செல்கிறான்; அது இப்போதுதான் நடந்தது, ஆனால் அது
அசாதாரணமானது அல்ல என்பதால் யாரும் அதைப் பற்றி படிக்க
விரும்புவதில்லை. சாதாரண மற்றும் அன்றாட விஷயங்கள் செய்தியாகாது.

நிச்சயமாக, அதே மனிதன் 95 வயதாகி, இன்னும் ஒவ்வொரு நாளும் அயராமல்
உடலைவருத்தி வேலைக்குப் போவதற்காக பேருந்தில் தினமும
பயணித்தால், அது அசாதாரணமாக இருக்கும்.

செய்திகளின் உன்னதமான வரையறை இதுதான்: “நாய் மனிதனைக்
கடிக்கிறது” என்பது செய்தி அல்ல; “மனிதன் நாயைக் கடிக்கிறது” என்பதே
செய்தி ஆகக்கூடிய தன்மையது.

ஒரு சமூகத்தில் வழக்கமாக இருப்பது மற்றொரு சமூகத்தில் அசாதாரணமாக
இருக்கலாம். மேலும், செய்திகளின் உள்ளடக்கம் சமூகத்திற்கு சமூகம்
மாறுபடும் தன்மையது என்றும் எதிர்பார்க்கலாம். இருப்பினும், ஒவ்வொரு
சமூகத்திலும், அசாதாரணமானது எதுவோ அது செய்தியாக இருக்க
வாய்ப்புள்ளது.

1. இது கவனத்திற்குரிய நிகழ்வாக இருக்கிறதா?

புதியதாகவும் அசாதாரணமாகவும் இருக்கும் நிகழ்வுகள் சிலவேளைகளில்
பொதுவான ஆர்வத்திற்குரியதாக இல்லாமல் இருக்கலாம். ஒரு பூச்சி முன்பு
வசிக்காத ஒரு தாவரத்தில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள்

தெரிவிக்கின்றனர் என வைப்போம். இந்தக் கண்டுபிடிப்பு புதியதாக
இருக்கலாம், மேலும் இந்த நிகழ்வு அசாதாரணமானது, ஆனால் ஒரு நிபுணர்
அல்லது ஆர்வலரைத் தவிர வேறு யாருக்கும் இந்தச் செய்தி ஆர்வத்தைத் தர
வாய்ப்பில்லை.

ஒரு துறைசார் சிறப்பு வெளியீட்டில் வேண்டுமென்றால் இது பெரிய
செய்தியாக வெளியிடப்படலாம், ஆனால் ஒரு பொதுவான செய்தி ஒளிபரப்பு
அல்லது பத்திரிகையில் இது அதிகபட்சமாக ஒரு சில வார்த்தைகளுக்கே
தகுதியானது.

1. இந்தச் செய்தி குறிப்பிடத்தக்கதா?

மேலே ஒரு பந்தியில் கூறப்பட்ட உதாரணத்தின்படி;
குறிப்பிட்ட அதே பூச்சி, முன்பு புதர் புல்லை உண்டு வாழ்ந்து
சாப்பிட்டிருந்திருக்கலாம். ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்ட இடம் வயலில்
உள்ள நெற்கதிராக  இருக்கிறதெண்டு வைத்துக்கொள்வோம், அப்போது இந்தக்
கதை செய்தியாகிறது, ஏனெனில் அது குறிப்பிடத்தக்கது. அது
கவனத்திற்குரியதாகக்கூடிய செய்திப்பெறுமதியை கொண்டுள்ளது.

மக்கள் பூச்சிகளில் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள்
உணவில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த பூச்சி இப்போது அவர்களின்
வயல்களை அச்சுறுத்தி விளைச்சல் குறையுமா இருந்தால், அது அவர்களுக்கு
கவலை அளிக்கும் விஷயமாகிறது. எனவே அது குறிப்பிடத்தக்கது என்பதால்
இது உரிய செய்திப்பெறுமதியைப் பெறுகிறது.

அதேபோல், இன்னொரு உதாரணத்தைப் பாரப்போம். ரோமன் கத்தோலிக்க
திருச்சபையானது பெண் பாதிரியார்களை நியமிக்க வேண்டும் என்று ஒரு
சாதாரண பொதுமகன் சொன்னால், அது செய்தி அல்ல. ஆனால் இதனையே
ஒரு பேராயர் சொன்னால், அது செய்தியாகிறது, ஏனென்றால் அவர் பேராயராக
இருந்து இந்த விடயத்தில் கருத்துச் சொல்வது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால்
பேராயர் போன்றவர்களின் கருத்துக்கள்தான் திருச்சபையின் கொள்கையை
உருவாக்க உதவுகின்றன.

1. இந்தச் செய்தி மக்களைப் பற்றியதா?

பெரும்பாலான செய்திகள் இயல்பாகவே மக்களைப் பற்றியவை, ஏனென்றால்
உலகை மாற்ற மக்கள் செய்யும் செயல்கள்தான் செய்திகளாகின்றன.

இருப்பினும், புயல், புதர்த் தீ, வறட்சி, எரிமலை வெடிப்பு அல்லது பூகம்பம்
போன்ற மனிதரல்லாத மூலங்களாலும் செய்திகள் உருவாக்கப்படலாம். இந்தக்
கதைகளைப் வெளியே செய்தி ஆக்கும்போது, ​​அந்தக் கதை மக்களை
மையமாகக் கொண்டிருப்பதை உறுதி செய்வது முக்கியம்.

உதாரணமாக பசிபிக் பெருங்கடலின் நடுவில், மக்கள் வசிக்காத
தீவுகளிலிருந்து ஒரு சிறு எரிமலை உருவாகலாம்; அதேபோல் யாரும்
வசிக்காத ஒரு புதரில் தீ எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எரியக்கூடும்;
ஆனால் யாருடைய சொத்துக்களையும் சேதப்படுத்தும் அல்லது யாருக்கும்
காயத்தை ஏற்படுத்தாத பூகம்பம் அல்லது தீ உண்மையில் பெரும் செய்தி
அல்ல. மக்கள் சம்பந்தப்படாத ஒரு சம்பவம் என்பதால் அது பெறுமதிமிக்க
செய்தியா இல்லையா என்பது அந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு செய்தியில் சொல்லப்படும் கதை எவ்வளவு வலிமையானது?

புதியதாக, அசாதாரணமாக, சுவாரஸ்யமாக, முக்கியத்துவம் வாய்ந்ததாக,
மக்களைப் பற்றியதாக இருக்கும் ஒரு கதை, அதாவது செய்தி உண்மையில்
மிகச் சிறந்த கதையாக இருக்கும். ஒரு கதையின் வலிமையை
தீர்மானிப்பதற்கான ஒரு வழி, மேற்கூறிய ஐந்து அளவுகோல்களில் எத்தனை
குறிப்பிட்ட செய்தியில் பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்ததாக
இருக்கும்.

இருப்பினும், ஒரு செய்தியின் கதைகளை வலிமையாகவோ பலவீனமாகவோ
மாற்றும் பிற காரணிகளும் உள்ளன:

மக்களுக்கும் செய்திக்கும் இடையிலான நெருக்கம்

இரண்டு வெவ்வேறு இடங்களில் நடக்கும் ஒரே நிகழ்வு இரண்டு வெவ்வேறு
அளவிலான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கலாம். உங்கள் சொந்த நாட்டில்
ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு என்பது நீங்கள் எப்போதும் கருதுவதைப் போலவே
பெரிய செய்திக்குரிய கதையாகும். ஏனெனில் அது உங்கள் சொந்த நாட்டின்
சமநிலையைப் பாதிக்கலாம்.

இதேபோல், உங்கள் நாட்டிலிருந்து வெகுதொலைவில், மற்றொரு கண்டத்தில்
உள்ள ஒரு சிறிய நாட்டில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கின்றதென்று
வைப்போம். அது ஒரு சில பத்திகளுக்கு மேல் தகுதி பெறுகின்ற
செய்தியாகின்ற வாய்ப்பில்லை.

உள்ளூர் செய்திகளின் கவர்ச்சி என்னவென்றால், உங்கள் வாசகர்கள் அல்லது
பார்வையாளர்கள் சம்பந்தப்பட்ட மக்கள் அல்லது செய்தி நடக்கும
இடத்தை அறிந்திருக்கலாம்.

நீங்கள் ஒரு பரந்த பகுதிக்கு உங்கள் ஊடகத்தை ஒளிபரப்பினால் அல்லது பல
நகரங்களில் உங்கள் பத்திரிகையை விற்கின்றீர்கள் என்றுவைப்போம். ஒரு
இடத்தைச் சேரந்த குறிப்பிட்ட ஒரு செய்தி குறித்த இடத்தின் வாசகர்களுக்கு
ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கக்கூடும். ஏனெனில் அது அவர்களின் இடம்
சம்பந்தப்பட்ட கதை. வேறு இடத்தின் வாசகர்களுக்கோ அல்லது
பாரவையாளர்களிற்கோ அது ஆர்வத்தைத் தூண்டும் செய்தியாக இருக்காது
என்பதை நீங்கள் உணர வேண்டும்.

செய்தியுடன் தம்மை இனம்காணும் தன்மை

சராசரி நேயர்களானவர்கள் பல வகைப்பட்டவர்களாக இருக்கலாம்.
இவ்வாறான வாசகர், கேட்பவர் அல்லது பார்வையாளர் ஒரு பெற்றோராக
இருக்கலாம், குழந்தைகளுக்கு நல்ல கல்வியை ஊட்ட விரும்பும் நபராக
இருக்கலாம், கார் வாங்க வேண்டும் என்று கனவு காண்கிறவராக இருக்கலாம்,

விடுமுறையில் வீட்டிற்குச் செல்ல ஆவலுடன் காத்திருப்பவராக இருக்கலாம்,
அல்லது அடுத்து வரவிருக்கும் வரு பெரும் கொண்டாட்டத்தை அல்லது ஒரு
திருவிழாவை எதிர்நோக்கியுள்ளவராக இருக்கலாம். எனவே, நீங்கள்
செய்தியினைத் தயாரிக்கும் உங்கள் சொந்த வாசகர்கள் அல்லது கேட்போர்
எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து நீங்கள் மிகத் தெளிவாகப்
புரிந்துவைத்திருக்க வேண்டும்.

எனவே வரதட்சணை பற்றிய விடயங்கள், குழந்தைநலன்கள், நிலத்
தகராறுகள், புதிய பள்ளிகள், மலிவான அல்லது அதிக விலை கொண்ட
கட்டணங்கள் அல்லது உங்கள் சராசரி வாசகரை பாதிக்கக்கூடிய வேறு
எதுவாக இருந்தாலும், அவை வாசகர்கள் அல்லது பார்வையாளர்கள் மீது
தனிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்.

மக்கள் தங்களைப் போன்ற மற்றவர்களைப் பற்றிய கதைகளுடன் தம்மையும்
இணைத்து இருத்தி அடையாளம் காண முடியும். எனவே பலர் தம்மை
அடையாளம் காணக்கூடிய கதைகள் ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும்
கதைகளை விட வலுவானவை என்பதை உணர்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *