Posted in

எப்படி ஒரு செய்தியை ஆரம்பிப்பீர்கள்? ஒரு செய்தின் அத்தியாவசிய கூறுகள்

பொதுவாக, ஒரு பள்ளிக்கான திட்டம் அல்லது ஒரு வணிக விளக்க
ஆவணத்திற்கு எதையாவது எழுதும்போது, ​​நீங்கள் அனைத்துத்
தகவல்களையும் சேகரித்து, அதை ஒருங்கமைத்து, ஒன்றாக இணைத்து எழுதி.
இறுதியிற்தான் உங்கள் முடிவினை எழுதுவீர்கள். ஆனால் செய்தியினை
எழுதும்போது அப்படித் தொழிற்படமுடியாது.

மேலே உள்ள படத்தில் பாருங்கள் அனைத்து துணை வாதங்கள் மற்றும்
தகவல்களிற்குக் கீழேதான் முடிவு உள்ளது. ஆனால் செய்தி எழுதுவது
இதற்கு நேர்மாறானது. கதையின் சாரத்துடன்தான் நீங்கள்
செய்தியைஆரம்பிக்கவேண்டும் உதாரணமாக, "மின்சாரத்தின் விலை 15
சதவீதம் கூடியுள்ளது" என்றதொரு தலைப்பை கற்பனை செய்து பாருங்கள்.

இந்தத் தலைப்பின் பின்னர்தான், இந்த விலையேற்றத்தின்காரணத்தினால்
பொருட்களின் விலையேற்றம், உற்பத்தியாளர்கள் மற்றும்
தொழிற்சாலைகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன, வேலைவாய்ப்பு
போன்றவற்றின் மீதான இதன் தாக்கம் போன்ற கூடுதல் தகவல்களைச் நீங்கள்
சேர்க்கவேண்டும்.

இந்த மின்சார விலையேற்றம் எதிர்பார்க்கப்பட்டதா, அதைப் பற்றி என்ன
செய்யப்படுகிறது, அது குறுகிய காலமாக இருக்குமா அல்லது நீண்ட காலம்
நிலைக்கப்போகிறதா, மக்கள் இந்த விலையேற்ற்த்திற்கு எவ்வாறு
எதிர்வினையாற்றுகிறார்கள் போன்ற விவரங்கள் பின்னர் சேர்க்கப்படும்.

இந்தச்செய்தியை நுகர்பவர், செய்தியின் தலைப்பின்மூலம்அடிப்படை
உண்மைகளை அறிந்து, வாசித்தலை அல்லது கேட்டலை நிறுத்தலாம்.
அதேவேளை மேலும் அறிய விரும்பினால் மேலதிக தகவலுக்குத்
தொடரலாம்.

மேலே உள்ள வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சில பத்திரிகையாளர்கள்
இந்த முறையை தலைகீழ் பிரமிட் என்று குறிப்பிடுகிறார்கள். இதனைக்
கவனித்தீர்களென்றால் செய்திப் பெறுமதிகொண்ட தலைப்பு மேலே உள்ளது,
மேலும் செய்தித் தகுதிக்கு ஏற்ப கூடுதல் தகவல்கள் பின்னர் கீழே
சேர்க்கப்படுகின்றன.

அத்தியாவசியத் தகவலைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் முதல் சில
வரிகளிலேயே அதைப்பெற்றுக்கொள்ளமுடியும், அதே நேரத்தில் கதையால்
கவரப்பட்டவர்கள் இச்செய்தியின் அடிப்படையை விளக்கும் பின்னணித்
தகவல்களைத் தொடர்ந்து படிக்கலாம். இதேவேளை இந்தச் செய்தியில்
அவ்வளவு ஆர்வம் இல்லாதவர்கள் தலைப்பைத் தொடர்ந்து ஒரிரு
வரிகளிற்குப் வேறொரு செய்திக்கு தாவியிருப்பார்கள்.
இது ஒரு எளிய ஆனால் பயனுள்ள நுட்பமாகும், இந்த முறையில் ஒரு
பார்வையாளர் இலகுவாக பல்வேறு செய்திகளில் கவனம் செலுத்துகிறார்.
என்பதை விழங்கிக்கொள்ளுங்கள்.
ஊடகவியலாளராகிய நீங்கள், முதல் வரி என்ன, அடுத்து இரண்டாவது,
மூன்றாவது, மற்றும் தொடர்ந்த வரிகளாக எப்படி செய்தியினை
எழுதப்போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
மேலும், நீங்கள் விவரங்களில் கூடிய கவனம் செலுத்தி, கதையின் பிற
அம்சங்களைப் புறக்கணித்து சில வகையான தகவல்களை அதிகமாக
வழங்கினால், உங்கள் பார்வையாளர்களையோ வாசகர்களையோ நீங்கள்
இழக்க நேரிடும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

மொழிப்பிரயோகத்தில் கவனம் செலுத்துங்கள்

  •  உங்கள் வாசகர்கள் அல்லது கேட்போர்கள் செய்திகளைப் புரிந்துகொள்ள
    ஏதுவாக உங்கள் மொழியை தெளிவாகவும் எளிமையானதாகவும் நீங்கள்
    வைத்திருக்க வேண்டும்.
  • வாக்கியங்கள் சுருக்கமானதாக இருக்க வேண்டும். 20 வார்த்தைகளஇற்கு
    அல்லது மூன்று விடயதானங்களிற்கு மேலாதனதாக அவை இருக்க
    வேண்டும்.
  •  வாக்கிய அமைப்பு எளிமையானதாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல,

புதிய வார்த்தைகள் பயன்படுத்தும் போது அவற்றை விளக்கத்
தவறாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *