Posted in

செய்தி என்பது எது?

செய்திகளைக் கண்டுபிடிப்பது எவ்வாறு?

செய்திகளுடன் செயற்படுவது எவ்வாறு?

செய்திகளை பலவாறு வகைப்படுத்தலாம்:

  • திடீரென இடம்பெறும் நிகழ்வுகள்: கொள்ளை, தீவிபத்து, வீதிவிபத்து போன்ற பல செய்திகளை இங்கே உதாரணமாகக இங்கே கூறலாம்.
  • புள்ளிவிபரச் செய்திகள்.
  • பத்திரிகை மகாநாடுகள்.
  • சில அரசியற்கட்சிகள், சமுக நிறுவனங்கள் சொல்லவரும் செய்திகள்.
  • ஊடகவியலாளர் சமுகத்தில் முக்கியமானதெனக்கருதும், அதேவேளை தானாகவே ஆராய்ந்து கண்டறியும் விடயங்கள்.

ஒரு விடயம் செய்தி எனப்படுவதற்கு உரிய அளவுகோல்கள் உண்டு, அவையாவன:

  • முக்கியத்தன்மை – இந்தச் செய்தி பலரின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டது. இந்தச் செய்தியினால் பல மாற்றங்கள் ஏற்படலாம்.
  • நெருக்கம் – உணர்வுரீதியாகவோ, பிரதேசம்சார்ந்தோ இந்தச் செய்தியானது ஒரு நெருக்கத்தன்மையை கொண்டிருக்கும்.
  • புதியதன்மை- சற்றுமுன்ன்னர் நடந்த செய்தி அல்லது முன்னர் அறியப்படாத செய்தி.
  • சடுதியான மாற்றம் – பெரிதாக நடந்த ஒரு விடயம் அல்லது சம்பவம்.
  • முரண்கள் – உடகங்களிற்கு எவரும் ஒத்துப்போகின்ற செய்திகளைவிட முரண்படுகின்றமையே பரபரப்பை ஏற்படுத்துபவை.
  • ஆவலைத் தூண்டும் செய்திகள் – சமூகத்திற்குப் பெரிதாகத் தேவையில்லாத விடயம், ஆனால் அசாதரணமான விடயங்கள்.
  • நிகழ்காலத்திற்கு தெவையான செய்திகள்- சமூகத்தில் நடந்துகொண்டுள்ள விடயங்களுடன் பொருத்தக் கூடிய செய்திகள்.
  • சாதகமான செய்திகள் – பலரை மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய செய்திகள்

ஆனால், கவனத்தில்கொள்ளுங்கள்:

ஒரு செய்தியென்றால் அது புதியதாக இருக்கவேண்டும் அல்லது ஏற்கனவே அறியப்படாததாக இருக்கவேண்டும்.

செய்திகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது?

ஆவணங்கள் மூலம்.

எவரும் அறியத்தரும் செய்திகள்.

ஏனைய பத்திரிகைகளில், சஞ்சிகைகள், இணையத்தளங்களில் வெளிவருபவை.

சொந்த அனுபவங்கள்.

தனிப்பட்ட நபர்களான செய்தி மூலங்கள் தரும் விடயங்கள்.

செய்திகளை எவ்வாறு அணுகுவது?

ஆர்வம் காட்டுங்கள், அவதானியுங்கள்!

உங்களுடைய கவனத்தை ஒரு விடயம் கவர்ந்தால் அல்லது அது ஒரு ஆச்சரியம்தரக்கூடிய விடயமென்றால், அது மற்றையவர்களின் கவனத்தையும் கவரக்கூடிய செய்தியாகக்கூடிய தன்மையைக்கொண்டுள்ளது என்பதைக், கவனத்திற்கொள்ளுங்கள்.

உங்களைச்சுற்றிநடக்கும் விடயங்களில் கரிசனை காட்டுங்கள். உங்கள் கவனத்திற்குவரும் செய்தியானது முன்னரே அறியப்பட்டதாக இருந்தாலும், அச்செய்தி தொடர்பாக ஒரு புது நோக்குநிலையில் அதனை அணுகலாமா என்று பாருங்கள் அல்லது அச்செய்திசார்ந்து வேறு ஏதும் விடயங்கள் நடந்துள்ளதா என்று ஆராயுங்கள். அச்செய்தி சார்ந்து ஏற்கனவே கூறப்படாத விடயங்கள் எதனையும் வேறு எவராவது சொல்லவருகிறார்களா என அவதானியுங்கள்.

காணொளிப்படம்: Vskills blogg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *