Posted in

கவனம்பெறும் வசனம் (focus sentence) என்றால் என்ன?

ஒரு செய்தியுடன் சம்பந்தமாகப் பலவிடயங்கள் கவனம்பெறும். அதில் எதனைப்பற்றி நாங்கள் செய்தி தயாரிக்கப்போகின்றோமென்பது முக்கியமானது, இல்லாவிட்டால் இதுபற்றிய தெளிவில்லாமல் நாம் செய்தி தயாரிக்கப் புறப்படுவோம். இதன் காரணமாக செய்திதரும் மூலங்களிடம் எண்ணுக்கணக்கில்லாமல் பலவிதமான கேள்விகளைக் கேட்கநேரும். இதனால் எதனைச் செய்தியாக்கப் போகின்றொமென அறியாமல் நாம் தடுமாறநேரிடும். கவனம் பெறவேண்டிய ஒரு வசனத்தினை (focus sentence) செய்திசார்ந்து எழுதிவிட்டோமென்றால் அந்தச் செய்தியினை நேர்த்தியாக எம்மால் தயரிக்கமுடியும். ஒரு கவனம்பெறும் வசனமானது எழுவாயையும் வினைச் சொல்லையும் கொண்டிருக்கும். கூடியவரை இந்த கவனம்பெறும் வசனமானது (focus sentence) ஒரு முரணைக் கொண்டிருக்கவேண்டியதையும் நாம் கவனிக்கவேண்டும். இந்தக் கவனம் பெறும் வசனமானது (focus sentence) ஒரு கேள்வியாக இருக்கமுடியாது. ஆனால் கவனம்பெறும் வசனம் (focus sentence) பல கேள்விகளைத் தோற்றுவிக்கும். செவ்வி காணும்போது நாம் வினவும் கேள்விகள் எப்படியாக இருக்கவேண்டுமென்பதை செவ்வி காணும் நுட்பங்கள் எனும் பகுதியைச் சொடுக்கிப்பாருங்கள்.

காணொளிப்படம்: Racebannon.medium

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *