குறிப்பிட்ட செய்திசார்ந்து ஒரு கவனம்பெறும் வசனத்தினை(focus sentence) முதலில் எழுதுங்கள்.
அதனைச் செய்தியாக்குவதற்கு உங்களிடம் என்னவிதமான ஆதாரம் உண்டெனக் கண்டறியுங்கள்.
செய்திக்குரிய செய்திமூலமான நபர் யாரென அறியுங்கள். – செய்தியுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது செய்தியின் சாரத்தினைச்சார்ந்து அந்தச் செய்திக்குரிய விடயம்பற்றித் தனது அனுபவத்தினைச் சொல்லக்கூடியவர்கள் எவரும் உள்ளனராவெனப் பாருங்கள்.
இதனைத் தொடர்ந்து வருவது குறிப்பிட்ட அந்தச் செய்திசார்ந்து நீங்கள் எடுக்கக்கூடிய தேரிவுகள் அல்லது தவிர்க்கவேண்டியவை.
இந்தப்போக்கில் சிலவேளை ஒரு புதிய கவனம்பெறும் வசனத்தினை(focus sentence) நீங்கள் எழுதவேண்டியி
ருக்கும். அல்லது அந்தச் செய்திசார்ந்து செய்திமூலமாக உள்ள நபர் உங்களிற்குக் கிடைக்கலாம். இந்தச் செய்திசார்பாக இன்னுமோர் புதியதொரு சம்பந்தம் உங்கள் கவனத்தினை ஈர்க்கலாம். சிலவே
ளை எவருக்கு உரித்தானதாக அந்தச் செய்தியுள்ளது என்கின்ற ஒரு புதுச் சிந்தனை உங்களிற்கு வரலாம்.
ஒரு செய்திபற்றிய கவனம் உங்களிற்குக் கிடைத்தால், உடனே சம்பந்தப் பட்டவர்களிற்கு அழைப்பெடுங்கள், வீணே நேரத்தைக் கடத்தாதீர்கள். ஒரு செய்தியை நீங்கள் சார்ந்திருக்கும் ஊடகம்சார்ந்து விரைந்து வெளிக்கொணர நீங்கள் கடுமையாகத் தொழிற்படவேண்டியிருக்கும்.
காணொளிப்படம்: Avalon