ஊடகவியலின் நோக்கமானது நிஜத்தை உண்மைத் தன்மையுடன் வெளிக்கொணர்வது ஆகும், ஆனால் ஊடகவியலாளர்களானவர்கள் பல்வேறுபட்ட நிஜங்கள் பற்றிய புரிதல்களுள்ள உரையாடல் வெளிகளில்
செயற்படவேண்டியிருக்கும். இந்த வகையில் ஊடகவியலாளர்களின் தொழிற்பாடுகளிலொன்று உரையாடல்களை விழங்கிக்கொள்வதுடன், அவற்றை விளக்கி வெளிப்படுத்துவது ஆகும். ஊடகவியலாளர்களானவர்கள் சம்பவங்களினதும் சமூகமுரண்பாடுகளினதும் படங்களையும் அவற்றின் பின்னணிகளையும் பொதுமக்களிற்கு கொண்டுவரக்கூடியவர்கள். இந்தவகையில் அரசியல் மற்றும் சமூகவியல் வாழ்வில் மக்கள் ஈடுபட ஏதுவான நிலைமையை அவர்கள் உருவாகுகிறார்கள். ஓரு ஊடகவியலாளர் ஒரு நடுநிலைமைத் தன்மையினை முழுமையாக எட்டுவது என்பது கடினமான காரியம், ஆனால் நடுநிலைமையினை ஒரு இலட்சியப் புள்ளியாகவரித்து அதற்காக முயலவேண்டும். ஒரு சமூகம்சம்பத்தப்பட்ட விடயத்தினை அல்லது ஒரு சம்பவத்தினை ஒரு ஊடகவியலாளர் வெளிப்படுத்தும் போது ஒரு தனிமனிதனாகவே அதனை அணுகுகிறார். அந்த ஊடகவியல் வெளிப்பாடு அதனை வெளிப்படுத்துவபரின் தனிப்பட்ட ஆளுமை, அவர் ஆணா பெண்ணா என்பது, அவருடைய அறிவு, சமூகப் பெறுமதிகள் மற்றும் ஒரு விடயத்தினை ஆளமாகக் கவனிக்கின்ற இயல்பு என்பற்றில் கட்டப்படுகிறது என்பது உண்மை. ஆனால் எடுக்கப்படும் விடயங்களை நடுநிலைமைத்தன்மையுடன் அணுகவேண்டுமென்பதை ஊடகவியலாளர்கள் ஒரு தொழிற்தர்மமாகக் கொண்டிருக்கவேண்டும்.
காணொளிப்படம்: Mediaplace partners