ஊடகங்கள் பின்பற்றவேண்டிய நெறிமுறை நெறிகள் (ethical norms) மற்றும் சுய-நீதி (Selv justice) ஆகியவை முக்கியமாக தனிநபர்களை புண்படுத்தும் மற்றும் தீங்கு விளைவிக்கும் ஊடகச்செயற்பாட்டிலிருந்து அவர்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. அதனால்தான் பல்வேறு ஊடகங்கள் தமது செயற்பாட்டை தாமே கவனத்தில் வைத்திருக்கக் கூடிய “கவனம் கொள்வோம்” என்கின்ற நெறிமுறையினை தமது செயற்பாட்டை வழிநடத்தும் முறைமையாக வைத்துள்ளனர். இது பற்றி தனியான பத்தியில் பார்ப்போம். ஆனால் “கவனமாக இருப்போம்” என்ற இந்த முறைமை ஊடகங்களின் சமூகப் பாத்திரத்தையும் சுதந்திரமான சமூகத்தில் ஊடகங்களுக்கு இருக்கும் உரிமைகளையும் கட்டுப்படுத்தாது. சமூகத்தின் பலமட்டங்களிலும் அநீதி இளைக்கப்படுகின்ற சமயங்களில் ஊடகங்களின் முயற்சிகள் பல சமயங்களில் சமூகத்தில் அநீதியைத் தடுக்கவும், தவறான மனப்பான்மையைத் திருத்தவும் ஏதுவான காரணியாக உள்ளன.
ஒரு பொறுப்பான பத்திரிகை நெறிமுறை மதிப்பீடு, பொது நிறுவனங்களில் உள்ள விமர்சனத்திற்குரிய விடயங்களைச் சுட்டிக்காட்டுவது மட்டுமல்ல, அந்த நிறுவனங்களின் பொறுப்பான பதவிகளில் உள்ள, ஆனால் தனிப்பட்ட நபர்களாகக் கருதப்படக்கூடியடிய நபர்களிடமும் விமர்சனத்தன்மையுடன் இருப்பதாகும். இந்த வகையில் அந்த நபர்கள் அவர்களிடமுள்ள அதிகாரத்தின் காரணமாக ஊடகங்களின் உரிய விமர்சனத் தன்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
பத்திரிகை நெறிமுறைகள் சமூகத்திலுள்ள அதிகாரபீடங்கள் இளைக்கின்ற விமர்சனத்திற்குரிய செயற்பாடுகளைப் பாதுகாக்கக்கூடாது. இதன் அர்த்தம் என்னவென்றால் ஊடக நெறிமுறைகளில் உள்ள அதீத கவனம், மக்களை அவர்களின் சுதந்திரம், அதிகாரதுஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாத்தல் என்னும் ஊடகங்களின் பாத்திரங்களிலிருந்து சமரசம் செய்யவைக்க முடியாது. நெறிமுறை பற்றிய முரண்பாடுகள் ஏற்படும்போது ஊடகஆசிரியர் மற்றும் பணியாளர்கள் – எதை வெளியிடலாம், மற்றும் வெளியிட வேண்டும் என்கின்ற விவாதத்தின் மூலம் பொறுப்பான மற்றும் உரிய அணுகுமுறையை வளர்த்துக் கொள்கிறார்கள். வெளியீட்டி விதிகள் என்னும் பகுதியில் இதனை விரிவாகப் பார்ப்போம்.
காணொளிப்படம்: Unesco.org