கவனம் கொள்ளவேண்டிய ஒழுங்குமுறையில் ஊடகங்களின் சமூகப் பணியானது பின்வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது: தகவல், விவாதம் மற்றும் சமூக விமர்சனம் போன்ற முக்கியமான பணிகளை ஊடகங்கள் கவனித்துக் கொள்கின்றன. வெவ்வேறு கருத்துகள் வெளிப்படுவதை உறுதி செய்ய வேண்டிய சிறப்புப் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.
ஊடகங்களானவை கருத்துச் சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் பொதுமக்களிற்கான வெளிப்படைத்தன்மைக் கொள்கை என்பவற்றைப் பாதுகாக்க வேண்டும். வெளிப்படையான விவாதம், தகவல்களை இலவசமாக வழங்குதல் என்பவற்றிற்கு உடகங்களிற்குச் சுதந்திரம் இருக்கவேண்டும். மற்றும் தகவல் வழங்கக்கூடிய செய்திமூலங்களை சுதந்திரமாக அணுகக்கூடியநிலமையினைத் தடுக்க விரும்பும் எவருடைய அழுத்தத்திற்கும் ஒரு ஊடகம் அடிபணிய முடியாது.
சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி தெரிவிப்பதும், விமர்சனத்திற்குரிய நிலைமைகளை வெளிக்கொணர்வதும் பத்திரிகைகளின் உரிமை.
பொது அதிகாரிகள், நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அல்லது பிறரால் சாதாரண ஒரு பொதுமகனான தனிநபர் அல்லது குழுக்கள் மீதான அதிகார அத்துமீறல் அல்லது புறக்கணிப்பு இருந்தால் அதற்கு எதிராக சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாப்பது ஊடகங்களின் பணியாகும்.
காணொளிப்படம்: blog.ipleaders